வெளிநாடுகளில் பணிபுரிவோருக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதி
covid 19
srilanaka
complaint
By Vasanth
நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் காரணமாக வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை இணைய வழி மூலம் அனுப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் அவர்களது உறவினர்களுக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் அறிவிக்க முடியும்.
இதன்படி www.slbfe.lk என்ற இணையத் தளத்தின் ஊடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். பணியாளர்களின் பயணச்சீட்டு இலக்கம், பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் முறைப்பாடுகளை இதன் ஊடாக பதிவேற்ற முடியும்.
முறைப்பாடு தொடர்பான இலக்கமும் அந்தத் தருணத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு SMS ஊடாக கிடைக்கப்பெறும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி