கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு
covid-19
death
sri-lanka
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் கடந்த 3 ஆம் திகதி, மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தொற்று மற்றும் சுவாசக் கோளாறு ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர் கடந்த 2 ஆம் திகதி, களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தொற்று மற்றும் இரத்தம் விஷமடைந்தமை ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 217 ஆக உயர்வடைந்துள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி