சற்று முன்னர் வெளியான தகவல் -மேலும் நால்வர் உயிரிழப்பு
srilanka
covid 19 death
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
இவ்வாறு உயிரிழந்த நால்வரும் கொழும்பு 13 , மாத்தளை , கனேவல்ல மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்றைய தினத்தில் இதுவரை 584 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி