இலங்கையில் மேலும் 136 கொவிட் மரணங்கள் பதிவு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 136 பேர் நேற்றைய தினம் (13) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,567 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்றுடன், நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 490,110 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.