மீண்டும் உயரும் கொவிட் மரண எண்ணிக்கை
covid
sri lanka
death
By Vanan
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 31 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 14,158 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று (22) மேலும் 735 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 557,172 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 527,110 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்