இலங்கையில் மேலும் 2,856 பேருக்கு கொரோனா
covid
patient
sri-lanka
By Vanan
இலங்கையில் மேலும் 2,856 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 477,636 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 408,116 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவரத்ன இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, 175 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.