கொவிட் தொற்றாளர்களின் தொகை மேலும் அதிகரிப்பு
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 559 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 538,320 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 20, 270 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதுடன், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 504,376 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இன்று வெளிவந்த அறிக்கையின் படி, நாட்டில் மேலும் 20 பேர் கொவிட் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,674 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.