உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்- தன் மேலான குற்றச்சாட்டை மறுத்துள்ள முன்னாள் காவல்துறைமா அதிபர்!

easter attack court sri Lanka poojith jeyasudara
By Kalaimathy Nov 22, 2021 11:24 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளது என்பதற்கான போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும், அதனை தடுக்க எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமை மற்றும் கடமையை செய்ய தவறியமை உட்பட தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு தான் குற்றவாளியல்ல என முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, நாமல் பலல்லே, ஆதித்திய பட்டபெந்திகே, மொஹமட் இர்ஷாட் ஆகிய மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு இன்று விசாரணைக்கு எடுத்த போதே பூஜித இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. அப்போது அதில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தான் குற்றவாளி அல்ல என அவர் கூறியுள்ளார்.

இதன் பின்னர் முறைப்பாட்டாளர் சார்பில் நேர்நிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினம், சஹ்ரான் ஹாசீமின் தலைமையிலான தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பினர் நாடு முழுவதில் 8 இடங்களில் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களை அடிப்படையாக கொண்டு சட்டமா அதிபர், குற்றம் சுமத்தப்பட்டுள்ளவருக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட உள்ளது என்ற தகவல் கிடைத்திருந்தும், இலங்கை குடியரசின் காவல்துறைமா அதிபர் என்ற வகையில் கவனமின்றி கடமையை செய்ய தவறி, அதனை தடுக்காததன் மூலம் இலங்கை குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 102 சரத்திற்கு அமைய தவறு செய்துள்ளதாக குற்றம் சுமத்தி, சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலத்தில் நடந்த சம்பவங்களை கோர்வையாக சாட்சியங்களாக முன்வைக்கப்பட்டுள்ளதாக திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணைகளை நாளைவரை ஒத்திவைத்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு எப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதல்களில் 275 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 500 பேர் வரை காயமடைந்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026