ஸ்ரீலங்காவின் அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்த தேர்தல் களத்தில் ஏற்படவுள்ள மாற்றம்- வெளிப்படுத்திய ஜோதிடர்!
ஸ்ரீலங்காவிற்கு புதிய தலைமைத்துவம் ஒன்று கிடைக்கவுள்ளதாக இலங்கையின் பிரபல சோதிடர் சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் ராஜபக்ஷ குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒருவர் என்றும் அவரது பெயரை தற்போது வெளிப்படுத்த முடியாது என்றும் அவரது ஜாதகம் தன்னிடம் உள்ளதாகவும் குறித்த ஜோதிடர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த நபர் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சராக செயற்படுவதாகவும் அவர் சிம்ம ராசிக்காரர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறவில்லை என்றால் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதாக நான் கூறினேன்.
எனினும் அது சோதிடத்தில் இருந்த விடயம் அல்ல. மஹிந்த ராஜபக்ஷவை அரசியல் ரீதியில் வெற்றி பெற செய்வதற்கே அன்று நான் அவ்வாறு கூறினேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சோதிடம் பார்ப்பதற்கு அரை மணி நேரத்திற்கு 5 ஆயிரம் ரூபாயும், ஜாதகம் ஒன்று தயாரிப்பதற்கு 26500 ரூபாய் அறவிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags : #Sri Lanka #Election #Horoscope #Hinduism