அரசியல் கட்சிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு
srilanka
election
suriname
By Vasanth
மத மற்றும் வர்க்க அடிப்படையிலான குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாதென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. தற்போது காணப்படுகின்ற சட்டத்திற்கு அமைய, அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் போது தேசிய கட்சியாக மாத்திரமே பதிவு செய்ய தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தற்போது அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளிடம் பெயர் மாற்றம் மற்றும் யாப்பு மாற்றம் செய்யுமாறு எழுத்து மூலம் கோர உள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறான கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கான கால எல்லையொன்றும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Tags : #Sri Lanka #Election #Suriname
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்