வரி சலுகை தொடர்பில் அமெரிக்க பதிலை எதிர்நோக்கும் இலங்கை
வரி விகிதங்களை மேலும் குறைப்பதற்கான தொடர்ச்சியான கலந்துரையாடல் தொடர்பாக அமெரிக்காவிடமிருந்து (America) முறையான பதிலை இலங்கை (Sri Lanka) எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதிக்குள் அமெரிக்காவின் பதிலை எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கம்பஹாவில் (Gampaha) இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள்
இதற்கு அரசாங்கம் தனது திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் மற்றும் கருத்துக்காகக் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நிலையான பேச்சுவார்த்தைகள் மூலம் வரி விதிப்பை 44 வீதத்திலிருந்து இலிருந்து 30 வீதம் வரை குறைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றது எனவும் இலங்கைக்கு சாதகமான முடிவொன்று கிடைக்கப் பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
