இஸ்ரேலின் தீர்மானம் குறித்து கவலை வெளியிட்டுள்ள இலங்கை அரசு
Sri Lanka
Israel
Israel-Hamas War
Gaza
By Raghav
காசாவின் (Gaza) கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் (Israel) தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.
போர் நிறுத்த அழைப்பு
குறித்த அறிக்கையில், “இந்த தீர்மானம் வன்முறையை மேலும் அதிகரிப்பதுடன், காசா மக்களை மேலும் பல இன்னல்களுக்கு உள்ளாக்கும் செயலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதுடன், நிலையான அமைதியை நிலைநாட்ட இராஜதந்திர உரையாடல் மூலம் முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்