அரச பணிகள் மற்றும் நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துமாறு வலியுறுத்தல்
பல்வேறு பணிகள் மற்றும் நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துமாறு அரசாங்க நிறுவனங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீண்டும் வலியுறுத்தி நிதி அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் திறைசேரியின் செயலாளரான கே.எம்.மகிந்த சிறிவர்தன கடந்த வெள்ளிக்கிழமை (25) வெளியிட்ட சுற்றறிக்கையில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வுகளுக்கான செலவுகளை இடைநிறுத்துவதற்கு முன்னரே அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், பல நிறுவனங்கள் நிகழ்வுகள் மற்றும் பணிகளுக்காக செலவுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிறுத்தம்

அனைத்து அமைச்சுக்கள், திணைக்களம், அரச கூட்டுத்தாபனங்கள், நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் மற்றும் அரச வங்கிகள் திறப்பு விழாக்கள், கடமைகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்படும் நிகழ்வுகள், ஓய்வு பெறுதல், ஒன்றுகூடல்கள் மற்றும் விருந்துகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான செலவுகளை இடைநிறுத்தவேண்டும் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்ட்டுள்ளது.