மூன்றாக நொறுங்கிப்போன சிறிலங்கா சுதந்திரக் கட்சி
சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ளது. ஏனெனில் அதன் பிரதிநிதிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ளனர்.
அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குழுவினர் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், அமைச்சர் மகிந்த அமரவீரவும் அறிவித்துள்ளதோடு, தயாசிறி ஜயசேகர ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு உதவவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளர்
மேலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் 31ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அக்கட்சியின் உப தலைவர் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சட்டரீதியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியே தமது குழு எனவும், கட்சியின் தலைமையகம் தமது குழுவின் பிடியில் இருப்பதால் தாம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என சிலர் கூறுவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |