இன்று முதல் இலங்கை முழுவதும் விசேட தேடுதல் வேட்டை
corona
police
people
ajith rohana
By Shalini
நாடு முழுவதும் விசேட நடமாடும் சேவையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டல்களை மீறுகின்றவர்களை கண்டுபிடிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கை இன்று முதல் எதிர் வரும் வார இறுதி நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், புத்தாண்டு நிகழ்வுகள் உட்பட ஏனைய சந்தர்ப்பங்களிலும் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள் கூடிய கரிசனை செலுத்த வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்