மதுபானம் வழங்கி போராட்டக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மகிந்த ஆதரவாளர்கள்!
மகிந்த ஆதரவாளர்களுக்கும் அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பாரிய மோதல் இடம்பெற்றது.
இதன் காரணமாக காலிமுகத்திடல் பகுதிக்குள் நுழையும் பகுதிகள் காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளன.
மகிந்த ஆதரவாளர்கள் காலிமுகத்திடல் பகுதிக்குள் நுழைவதற்காக முயற்சித்து வந்த நிலையிலேயே காவல்துறையினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் அத்துமீறி நுழைய முற்படுபவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகை தாக்குதலும் முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் மகிந்த ஆதரவாளர்களுக்கு மதுபானங்கள் வழங்கி போராட்டக் களத்திற்கு அனுப்பி வைக்கப்படடுள்ளதாகவும் புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை உணவுப்பொதிகளிலும் மகிந்தவுக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்டிருப்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே அரசாங்கம் பதவியை விட்டு செல்லாது இருப்பதற்காகவே இவ்வாறு சிலரை அழைத்து தமக்கு ஆதரவாக செயற்பட வைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக் களத்திற்கு தமது ஆதரவாளர்களை மதுபானம் மற்றும் உணவு என்பன கொடுத்து, தமக்கு எதிராக போராடும் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
