இரத்தக்களரியான காலி- அதிகரித்தது படு காயமடைந்தோர் எண்ணிக்கை!
மூன்றாம் இணைப்பு
காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இதுவரையில் சுமார் 140 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் இதுவரை 78 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
மஹிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அங்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக கோட்டா கோ ஹோம் என கோசமெழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது போராட்டக்காரர்களின் கூடாரங்களை மகிந்த ஆதரவாளர்கள் தீயிட்டு எரித்துள்ளனர். இதன் காரணமாக பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
