நாட்டின் சட்டத்தை உருவாக்குமாறு மக்கள் யோசனை- எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆபத்தின் அறிகுறிகள்; தேரர் ஆரூடம்!
எமது நாட்டுக்கே உரிய சட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட சட்டக் கட்டமைப்பால், எமக்கு நாட்டை முன்னேற்ற முடியாமல் போயுள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் எந்த தலைவரும் ஒரு நாடு - ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தற்போதைய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
வெளிநாட்டவர்கள் சட்டத்தை உருவாக்கினர். அவற்றை நீக்கி விட்டு, எமது நாட்டின் சட்டத்தை உருவாக்குமாறு மக்கள் யோசனை முன்வைத்தனர். ஆகவே எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆபத்தின் அறிகுறிகள் எமக்கு தென்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் வளங்களை பாதுகாக்க கடுமையான சட்டத்தை முன்வைத்து, அதனை நடைமுறைப்படுத்துமாறு யோசனை முன்வைக்கப்பட்டது. நாம் பல தலைமுறைகளாக எமது மரபுரிமைகளை எமது எதிர்கால சந்ததிக்கு பாதுகாத்து கொடுக்க போராடிய இனம்.
சுதந்திரத்திற்கு பின்னர், ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், தேசிய கொள்கைகளை அறிமுகப்படுத்தாது, கட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதால், நாடு வீழ்ந்துள்ள இடத்தை நாம் அனைவரும் காண்கின்றோம்.
அரசியலுடன் சம்பந்தப்படாத அதிகாரி நாட்டின் ஆட்சியாளராக வர வேண்டும் என மக்கள் கோரினர். இதனடிப்படையில் தற்போதைய அரச தலைவர் அதனை செய்து காட்டினார். கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வர வேண்டும் என்ற யோசனையை மக்களே முன்வைத்தனர் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
You May Like This


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 17 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்