எமது நோக்கம் இதுவே; அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துவது அல்ல- சுதந்திர தினத்தில் கோட்டாபய!
சிறிலங்காவின் 74ஆவது சுதந்திர தினம் அரச தலைவர் தலைமையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இதன் போது, நாட்டிற்கு சரியானதைச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அனைவரையும் மகிழ்விப்பது அல்ல எனவும், அவநம்பிக்கையாளர்களால் உலகை மாற்ற முடியாது. பிரச்சினைக்கு தீர்வு காணாமல் விமர்சித்து பழகியவர்களுக்கு எதிர்காலம் குறித்த தொலைநோக்கு பார்வை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவேற்றும் போது சுதந்திரத்தின் அதிகபட்ச பலன் கிடைக்கும் எனவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேவேளை பொறுப்புகளை மறந்து உரிமைகளை பற்றி மாத்திரம் பேசுவதும் பொருத்தமானதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதில் நாட்டிலுள்ள அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்க முடியாது. எதிர்கால சுபீட்சத்திற்காக திட்டமிட்டதை விட்டுக்கொடுக்கவும் தயாரில்லை.
கடினமான காலங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதுபோன்ற நேரங்களை எதிர்கொள்ள வலிமையானவர்கள் தேவை. மற்றவர்களை மனரீதியாக வீழ்ச்சியடைய செய்யும் நபர்கள் சமூகத்திற்கு உதவ மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.