புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு!
சிறிலங்காவின் புதிய பிரதமராக தினேஸ் குணவர்த்தன பதவியேற்றுக் கொண்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவையும் இன்று நியமிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், இன்று மதியம் ஒரு மணியளவில் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால அமைச்சரவை
புதிய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இது இடைக்கால அமைச்சரவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், சர்வக்கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்காக ஏனைய அரசியல் கட்சிகளுடன் தற்போது பேச்சுக்கள் நடத்தப்பட்டுவரும் நிலையில், இதற்கு இணக்கப்பாடொன்று எட்டப்படும் வரையில் இந்த அமைச்சரவை செயற்படும் எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.