அதிபர் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை நீக்குவது தொடர்பில் அரச தரப்பில் இருந்து எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை என நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச கூறியுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் நிச்சயம் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “அதிபர் தேர்தலை ஒத்திவைக்க அரச தரப்பில் இதுவரை எந்தவொரு ஏற்பாடும் இல்லை. அதற்கான தேவையும் அரசுக்கு இல்லை.
பொதுத்தேர்தல்
அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படுமா என என்னால் கூற முடியாது.
அவ்வாறு நடத்துப்படுவது தொடர்பில் அதிபருக்கு தீர்மானிக்க முடியும். அதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் அவருக்கு உள்ளது.
அதிபர் தேர்தலுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், குறைநிரப்பு பிரேரணை ஒன்றின் ஊடாக பொதுத்தேர்தலுக்கான நிதியை பெற்றுக் கொள்ள முடியும்.
நிறைவேற்று அதிகார அதிபர் முறை
நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை நீக்குவது தொடர்பில் நீதி அமைச்சர் என்ற வகையில் நானோ அல்லது அமைச்சரவையில் வேறு எவரோ எந்தவொரு யோசனையையும் இதுவரை முன்வைக்கவில்லை.
அதற்கான உத்தேசமும் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் அது ஜனநாயக ரீதியிலான பொறிமுறையும் அல்ல.
சர்வஜன வாக்கெடுப்பை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகம் அல்ல. 1982 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பால் ஏற்பட்ட கறுப்பு புள்ளி இன்றும் மாறவில்லை” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |