ஆப்கானிஸ்தானின் நிலைக்கு சென்றுள்ள இலங்கை - விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை

srilanka ranil afghanistan
By Sumithiran Jul 28, 2021 08:10 AM GMT
Report

இலங்கை, ஜப்பானுக்கு நிகராக பொருளாதார ரீதியில் இருந்த காலம் சென்று தற்போது ஆப்கானிஸ்தான் இருக்கின்ற இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டதாக முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில் இருந்து மீட்சிபெற விரைந்து சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் பெற வேண்டும் என்ற ஆலோசனையை அவர் முன்வைத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் சமூக வலைத்தளமொன்றில் காணொளியொன்றை பதிவிட்டுள்ளார்.

எந்த சந்தர்ப்பத்திலும் பழைய அரசியல் புராணத்தைப் பாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இனவாத, மதவாத அரசியலை ஸ்ரீலங்கா மக்கள் இன்று வெறுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். பழைய முறைகளுக்கு நாங்கள் மீண்டும் செல்லமுடியாது. முன்னணிகளை அமைத்தோம் என்பதால் வெற்றியடையவும் முடியாது. மக்களுக்கு தற்போதைய நிலைமையிலிருந்து எப்படி மீண்டெழுவது என்பதையே தெரிவிக்க வேண்டும். அப்படியொரு வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதா?

ஸ்ரீலங்கா நாடு இன்று மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. நாங்கள் பிறந்த காலம்தொட்டு இதுவரையிலும் ஜப்பானுடன் இருந்தோம். ஆனால் இன்று ஆப்கானிஸ்தானுடன் இருக்கின்றோம்.முதலாவதாக குறுகிய கால நிவாரணத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும். இன்று கொவிட் தொற்று நெருக்கடி மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

நாங்கள் கொவிட் நெருக்கடியைக் கட்டுப்படுத்தக்கூடிய வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும். மற்றைய நாடுகளைப் போன்று மருத்துவ ஆலோசனைக் குழு மற்றும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துகிற நிர்வாகக் குழு நியமிக்கப்படல் அவசியம். இதுசார்ந்த தீர்மானங்களை அமைச்சரவை மேற்கொள்ள வேண்டும்.

அமைச்சரவை நியமனங்களை நியமித்தால் மட்டும் போதாது. நாடாளுமன்றத்தின் ஊடாக தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவும் வேண்டும். எமக்கு இன்று கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வெளிநாட்டு செலாவணி இல்லை.18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி அளிக்க முடியாதிருக்கின்றது.

அதனால் விரைந்து அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று உதவிகேட்க வேண்டும். அங்கிருந்து கிடைக்கின்ற நிவாரணத்தின் ஊடாக ஏனைய நாடுகளின் உதவிகளையும் நாட வேண்டும்”என தெரிவித்துள்ளார். 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015