ஆபத்தான பொறிக்குள் இலங்கை - முடிவை மாற்றியது இந்தியா..!
அமெரிக்காவின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டிருப்பாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் கூறுகிறார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் இணைந்துகொண்டு கருத்து தெரிவித்த போது இவ்வாறு கூறிய அவர், இலங்கை - இந்திய உறவு தொடர்பிலும் தொட்டுச் சென்றார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, “அமெரிக்கா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவுடனான போருக்கான ஒத்திகையை மேற்கொண்டு வருகின்றது.
இதனால் தாய்வான், மாலைதீவு, இலங்கை என்று அமெரிக்காவின் நகர்வுகள் முன்னகர்த்தப்படுகின்றன.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில், இப்போது மாலைதீவை தன்னகப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை துரிதமாக கொண்டு வருகிறது.
அமெரிக்கா முழுவதுமாக இராணுவ நலன்களை மையமாக வைத்தே இவ்வாறான நபர்களை மேற்கொண்டு வருகின்றது. அந்த நலனை அடைவதற்கு அமெரிக்கா மாலைதீவை கையாளுகின்ற அதேவேளை, இலங்கையையும் தன்னகத்தே எடுப்பதற்குரிய முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
அதை நிறைவேற்றும் வரையில் இலங்கைக்கு எதிரான தடைகள் மெல்ல மெல்ல அரங்கத்திற்கு வந்து கொண்டிருக்கும்.
அதனை நிறைவேற்ற முடியவில்லை என்று சொன்னால், அடுத்த கட்டத்திற்கு அவர்கள் போவார்கள். அதாவது, ஐசிசிக்கு இலங்கையை கொண்டு போவார்கள். இது எங்களில் தங்கி இருக்கவில்லை. பூகோள அரசியலில் தங்கியிருக்கிறது.
இலங்கை எந்தளவு தூரத்திற்கு இதனை கையாளுகிறது அல்லது இலங்கை எவ்வளவு தூரத்திற்கு சரணடைகிறது என்பதைப் பொறுத்து தான் இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்தியா இப்போது இலங்கையை இழந்த மாதிரியான தன்மை நிலவுகிறது. இதனால், இப்போது இந்தியா மாலைதீவை கைப்பற்ற முயற்சிக்கிறது.
பிரச்சினை என்னவென்று சொன்னால், இந்தியா அமெரிக்காவை ஓரங்கட்டியும், அமெரிக்கா இந்தியாவை ஓரங்கட்டியும் மாலைதீவை கைப்பற்ற நினைக்கின்றன. ஆனால் இதற்கான முடிவு எதிர்வரும் செப்டம்பர் மாதமே கிடைக்கும்” - என்றார்.
