அபாயகரமான நிலையில் இலங்கை - எச்சரிக்கும் சஜித்
பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையின் நீண்டகால உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மிகவும் அபாயகரமான நிலையிலுள்ளதாக வகைப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று(03) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைச் சுட்டிக்காட்டினார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “இந்த அவதானம் குறித்து 2020 ஆம் ஆண்டு முதலே எதிர்க்கட்சியாக நாம் சுட்டிக்காட்டிய போதிலும் அப்போதைய ஆட்சியாளர்கள் அதனைக் கேலி செய்து நாட்டை தவறாக வழிநடத்தினர்.
உள்நாட்டு கவனம்

யார் என்ன சொன்னாலும் சர்வதேச, உள்நாட்டு கவனம் இந்த விடயத்தில் செலுத்தப்படவில்லை.
அமெரிக்கா தலைமையிலான பல மேற்கத்திய நாடுகள் எமது நாட்டில் அரசியல் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் வரை எந்த வித உதவிகளையும் செய்வதில்லலை என கூறியுள்ளன.
8 மாதங்களில் 477 மருத்துவர்களும் 300 பொறியியலாளர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவகிறது. சுகாதாரத்துறையில் மருந்துகள் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்னைகள் நிலவி வருகிறது.
பொருளாதாரக் கொள்கைகள்

இவ்வாறான நிலையில் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.
இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தேர்தல் மூலம் புதிய மக்கள் ஆணையைப் பெறுவதுதான்” - என்றார்.
இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள் 6 மணி நேரம் முன்