“பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது” போல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த எத்தனிக்கும் ஸ்டாலின்!

M K Stalin Sri Lanka Narendra Modi India Kachchatheevu
By Kalaimathy Jun 02, 2022 07:18 AM GMT
Report

நாம் விழுந்து கிடக்கின்ற நிலையில் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல உரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கச்சதீவினை மீட்டு தருமாறு தமிழக முதலவர் ஸ்டாலின் நரேந்திர மோடியிடம் கேட்டுள்ளார் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் முன்னாள் தலைவர் என்.வி. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் சமகால விடயங்கள் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

இந்தியாவிடம் கையேந்தும் நிலை

“பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது” போல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த எத்தனிக்கும் ஸ்டாலின்! | Sri Lanka India Narendra Modi Stalin Kachativu

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் எல்லா நாடுகளிடமும் கையேந்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இந்தியாவிடம் கையேந்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய தமிழக முதல்வர் ஸ்டாலின் உரிய நேரத்தில் நிவாரண பொதிகளை அனுப்பி நாட்டிற்கு மிகப்பெரிய உதவினை செய்து மீட்டு இருக்கிறார். இந்த விடயத்திற்கு நாம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மீனவர் எல்லை தாண்டும் பிரச்சினை

“பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது” போல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த எத்தனிக்கும் ஸ்டாலின்! | Sri Lanka India Narendra Modi Stalin Kachativu

இலங்கை-இந்திய சட்ட விரோதமான இழுவைப் படகு தொடர்பான பிரச்சனைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. எனவே இதனை தீர்த்து தருமாறு இலங்கையின் வட, கிழக்கு மீனவர்கள் தமிழக பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்திருந்தோம்.

இதற்கமைய நாம் விழுந்து கிடக்கின்ற இந்த நிலையில் ”பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது” போல உரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கச்சதீவினை மீட்டு தருமாறு தமிழக முதலவர் ஸ்டார்லின் நரேந்திர மோடியிடம் கேட்டுள்ளார்.

எல்லை தாண்டும் நோக்கம்

“பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது” போல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த எத்தனிக்கும் ஸ்டாலின்! | Sri Lanka India Narendra Modi Stalin Kachativu

கச்சதீவினை மீள பெறுவது இழுவை மடி தொழிலுக்கு பரிகாரமாக அமையாது. இழுவை மடி தொழிலுக்கும், கச்சத்தீவுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இதற்கு மாறாக எங்கள் எல்லையினை தாண்டி கெடுதல் செய்வதற்கு வழிவகுக்கும் நோக்கிலே கச்சதீவினை மீட்டு தருமாறு ஸ்டாலின் கேட்டு இருக்கிறார்.

இந்த விடயமானது ஒரு நாடு சார்ந்த நாட்டு மக்கள் சார்ந்த தன்னியச்சையான, வட பகுதியில் வாழுகின்ற தமிழ் மக்களை புறம் தள்ளுகின்ற கருத்தினை வைத்திருப்பது என்பது எங்களுக்கு ஏமாற்றத்தினையும் வியப்பினையும் தந்திருக்கிறது.

பேச்சுவார்த்தை

“பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது” போல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த எத்தனிக்கும் ஸ்டாலின்! | Sri Lanka India Narendra Modi Stalin Kachativu

இந்திரகாந்தி – சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கச்சத்தீவு வழங்கப்பட்டிருந்தது. இலங்கை நாட்டின் இன்னும் பல பிரதேசங்களை கையகப்படுத்தும் நோக்கத்துடன் இந்த செயற்பாடுகளை செய்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

எனவே தமிழக முதலமைச்சர் இழுவைமடி தொழிலுக்கான முயற்சியாக கச்சத்தீவு விவாதத்தினை கைவிட்டு எங்களுக்கு இருக்கின்ற இழுவைமடி தொழில் பிரச்சனைகளை நிறுத்துவதற்குரிய முயற்சியினை எடுப்பது வரவேற்கத்தக்கது.

மின் உற்பத்தி

“பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது” போல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த எத்தனிக்கும் ஸ்டாலின்! | Sri Lanka India Narendra Modi Stalin Kachativu

இலங்கையின் அனலைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு போன்ற 3 தீவுகள் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்காக இந்தியாவிடம் கையளிக்கப்பட்டு இருக்கின்றன.

அத்தீவுகளிலே நிவாரணப்பொருளான மண்ணெண்ணையினை கொடுத்து கவர்ச்சியை ஏற்படுத்தி வசமாக்குகின்ற வேலையினையும் செய்துகொண்டு இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்