வடபகுதி மக்கள் பயனடையும் வகையிலான தமிழ் நாட்டின் “அட்சயபாத்ரா”

Indian fishermen Tamil nadu Sri Lanka India
By Kalaimathy Jun 06, 2022 11:16 AM GMT
Report

இந்திய முதலீடுகளால் வட மாகாண மக்கள் பலனை அனுபவிப்பார்கள் என இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் அட்சயபாத்ரா உதவிகள் எனும் தொனிப்பொருளில் இந்திய மக்களின் நிவாரண பொருட்களை வழங்கி வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

வட மாகாணத்தில் இரண்டு இலட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நிவாரணம் கையளிக்கப்பட்டுள்ளது. இது முதற்கட்டமான உதவியே. தமிழ்நாட்டில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் இன்னும் நிவாரணப்பொதிகள் வந்துகொண்டிருக்கின்றன.

அத்தியாவசிய நிவாரண உதவி

வடபகுதி மக்கள் பயனடையும் வகையிலான தமிழ் நாட்டின் “அட்சயபாத்ரா” | Sri Lanka India Vavuniya Northern Province Jaffna

இதன்போது அரிசி மற்றும் பால்மா கையளித்துள்ளோம். யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு 17000 லீற்றர் மண்ணெண்னை வழங்கி வைத்திருந்தோம். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துபொருட்கள் மருத்துவ உபகரணங்களும் நேற்று வழங்கி வைத்திருந்தோம்.

மண்ணெண்ணை வழங்கல்

வடபகுதி மக்கள் பயனடையும் வகையிலான தமிழ் நாட்டின் “அட்சயபாத்ரா” | Sri Lanka India Vavuniya Northern Province Jaffna

இன்னும் மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடியில் இருந்து வெளியில் வருவதற்கு முன்னோக்கி பார்க்க வேண்டியிருக்கின்றது. இந்தியாவில் இருந்து முதலீடு மற்றும் தொழில்வாய்ப்பு சந்தர்ப்பங்களை கொண்டு வரவும் நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

மிக விரைவில் இதற்கான பலனை வட மாகாணத்தில் காண்போம். அத்துடன் தனிப்பட்ட முறையில் சில மீனவர் சங்கத்தில் இருந்து மண்ணெண்னை கோரி கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

அதனை உத்தியோகபூர்வமாக அரசாங்க அதிபரூடாக அல்லது வட மாகாண செயலாளர் ஊடாக தொகுத்து எடுத்து வருமாறு கோரியுள்ளோம். அவ்வாறு வந்தால் பரிசீலனை செய்யலாம்.

மீன் பிடி

வடபகுதி மக்கள் பயனடையும் வகையிலான தமிழ் நாட்டின் “அட்சயபாத்ரா” | Sri Lanka India Vavuniya Northern Province Jaffna

இதேவேளை இந்திய இலங்கை மீனவர் பிரச்சனைதொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது, கடந்த ஒன்றரை மாதங்களாக இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்க தடை இருக்கின்றது.

இந்தியாவில் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கும் உபகரணங்கள் மற்றும் கப்பல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. அதேவேளை பேச்சுவார்த்தையும் பல மட்டங்களில் இடம்பெற்று வருகின்றது.

அரசியல் ரீதியிலும் இடம்பெற்று வருகின்றது. கச்சதீவை மீட்பதென்பது உத்தியோகபூர்மாக வரும் விடயம் அல்ல அவை எல்லாம் பத்திரிகையில் வரும் விடயங்களாகவே இருக்கின்றன எனவும் தெரிவித்தார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி