மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Landslide In Sri Lanka
By Dilakshan
7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 4 மணிவரையில் குறித்த பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி பதுளை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
குறிப்பாக மாத்தறை மாவட்டத்தின் ஹக்மன, அக்குரஸ்ஸ மற்றும் பிட்டபெத்தர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. '
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்