இலங்கை சார்பில் சர்வதேசத்திடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை வழங்குமாறு மாலைதீவு அதிபர் மொஹமட் சொலெஹ் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“மாலைதீவு முழுமையாக சுற்றுலாத்துறையில் தங்கிய பொருளாதாரக் கட்டமைப்பினைக் கொண்டது. வைரஸ் தாக்கத்திற்கு முன்பிருந்த நிலையில் 70 வீதம் மீண்டும் அடைந்துள்ளது.
ஆனாலும், இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக மீட்சி அடைவதற்கு சர்வதேச நிதி வளங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் இருக்க வேண்டும்.
இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் நாடு பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளது.
இதனால் இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளுக்கு சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக உதவிகளை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.