யாழின் பிரபல பாடசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் மாணவி முறைப்பாடு!

Human Rights Council Jaffna Sri Lanka
By Kalaimathy Aug 02, 2022 10:02 AM GMT
Report

யாழ்ப்பாணம் மானிப்பாயில் உள்ள ஏஞ்சல் தனியார் பாடசாலை நிர்வாகத்தின் செயற்பாட்டில் தனது கற்பதற்கான உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவி ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த பாடசாலையில் இருந்து விலகி பிறிதொரு பாடசாலையில் சேர்வதற்கான இடைவிலகல் விண்ணப்பம் தனக்கு உரிய முறையில் தரவில்லை என மாணவி மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்பின் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மாணவி மற்றும் அவரின் தாய் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையில்,

“பாடசாலையில் மனரீதியாக பாதிக்கும் வகையில் பல செயற்பாடுகள் இடம்பெற்றதை தனது மகள் தன்னிடம் தெரிவித்ததாகவும், அதன் காரணமாக குறித்த பாடசாலையில் கல்வி கற்பதில் தனது பிள்ளைக்கு விருப்பமின்மை காரணமாக இடைவிலகல் படிவத்தை தருமாறு பாடசாலை அதிபரிடம் கோரிக்கை விடுத்தேன்.

இடைவிலகல் கடிதம் தொடர்பில் சர்ச்சை

யாழின் பிரபல பாடசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் மாணவி முறைப்பாடு! | Sri Lanka Manipay Angel School Human Rights Media

கொழும்பில் கல்வியை தொடர போவதாக தெரிவித்த நிலையில் அவர்கள் இடை விலகல் விண்ணப்பத்தை தருவதற்கு இழுத்தடித்தார்கள்.

நான் கொழும்பு செல்ல வேண்டும் எனக்கு இன்று படிவம் தாருங்கள் அல்லது குறித்த பாடசாலைக்கு பொறுப்பாக உள்ள கிறிஸ்தவ பாதிரியாரை சந்திக்க அனுமதிக்குமாறு கேட்டிருந்தேன்.

அதற்கும் அனுமதிக்காத பாடசாலை நிர்வாகம், இடைவிலகல் விண்ணப்பத்தை தராது பிறிதொரு படிவத்தில் எனது பிள்ளையின் ஒழுக்கம் தொடர்பில் ஆரோக்கியமான வார்த்தையை பதிவிடாதது எனக்கு மன வேதனையை தந்தது.

எனது பிள்ளை குறித்த தனியார் பாடசாலையை விட்டு விலகி பிறிதொரு பாடசாலையில் சேரக்கூடாதென பழிவாங்கும் நோக்கில் ஒழுக்கவீனம் தொடர்பில் கருத்தை பதிவிட்டதாக கருதுகிறேன். 

எனது பிள்ளையின் ஒழுக்கம் சரியில்லாமல் இருந்தால் ஏன் இவ்வளவு காலம் எனது பிள்ளையை பாடசாலையில் அனுமதித்திருந்தீர்கள். அல்லது ஒழுக்கம் தொடர்பில் ஏன் எனக்கு கூறவில்லை என கேள்வி எழுப்பினேன் அதற்கு அவர்கள் ஒன்றும் பேசவில்லை.

ஆகவே திட்டமிட்ட முறையில் எனது பிள்ளையை குறித்த தனியார் பாடசாலை பழி வாங்குவதாக நினைக்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

பாடசாலை செயற்பாட்டால் மனரீதியாக பாதிப்படைந்த மாணவி


இது தொடர்பில் குறித்த மாணவி கருத்து தெரிவிக்கும் போது,

குறித்த பாடசாலையில் இடம்பெற்ற செயற்பாடுகள் தொடர்பில் தான் மனரீதியாக பாதிப்படைந்த நிலையில் பாடசாலையில் இருந்து விலக முற்பட்டதாக தெரிவித்தார்.

கல்வி அடிப்படை உரிமைகளில் ஒன்றாகக் காணப்படும் நிலையில் விரும்பிய பாடசாலையில் கல்வியை தொடர்வதற்கு வழி ஏற்படுத்தி தர இடைவிலகல் கடிதத்தை உரிய முறையில் பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்..

மேலும் ஒழுக்கம் தொடர்பில் பதிவிட்ட காரணத்திற்கான சான்றையும் கூற வேண்டும் எனக்கோரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026