கொழும்பில் அண்ணனால் தாக்கப்பட்ட தம்பி உயிரிழப்பு!
Sri Lanka Police
Colombo
Sri Lankan Peoples
By Laksi
கொழுப்பு, பொரளை செர்பன்டைன் வீதியிலுள்ள வீடொன்றில் மூத்த சகோதரன் கத்தரிக்கோலால் தாக்கியதில் அவரது தம்பி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சகோதரனுடன் வாக்குவாதம்
மது அருந்திய நிலையில் மூத்த சகோதரனுடன் வாக்குவாதம் முற்றி, சந்தேக நபரான மூத்த சகோதரர் தம்பியின் நெஞ்சுப் பகுதியில் கத்தரிக்கோலால் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினரால் கைது
இவர்கள் இருவரும் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரின் சகோதரன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தரிக்கோலுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி