இலங்கை மக்களை பேராபத்தில் ஆழ்த்திய அமெரிக்கா..!
நாட்டில் பதிவுசெய்யப்பட்ட 1,800 தேசிய அரசு சாரா நிறுவனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை செயல்படாத நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) இந்த அமைப்புகளுக்கு வழங்கும் நிதியை நிறுத்தியதே என்று கூறப்படுகிறது.
ஆபத்தில் வேலைவாய்ப்புகள்
இதன் விளைவாக, அரசு சாரா நிறுவனங்களின் பல திட்டங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட வேண்டியிருப்பதாகவும் தொடர்புடைய திட்டங்களில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் வேலைகளும் ஆபத்தில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
USAID வழங்கி வந்த நிதியை நிறுத்தியதால் அரசு சாரா நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதே அதற்கெல்லாம் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது தேர்தல் கண்காணிப்பு செயல்முறையும் நெருக்கடியான நிலையில் இருந்ததாகவும், அதற்குத் தேவையான நிதி இருக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
வெளிநாட்டு அமைப்புகள்
இருப்பினும், நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பெரும் பணிகளைச் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், பிரதேச செயலக மட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட நாற்பதாயிரம் அரசு சாரா நிறுவனங்களில் பெரும் எண்ணிக்கையிலானவை செயல்பாட்டில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
