இறுதிப் போட்டிக்கான பலப்பரீட்சை! எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இலங்கை - பாகிஸ்தான் போட்டி
2025 ஆசிய கோப்பையின் சூப்பர் ஃபோர் கட்டத்தின் மூன்றாவது போட்டி இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே செப்டம்பர் இன்று இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 8:00 மணிக்கு இடம்பெறும்.
சுப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியை தனதாக்கிக்கொள்ள இரு அணிகளும் தங்கள் வெற்றியை பதிவு செய்ய இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளன.
பாகிஸ்தான் - இலங்கை அணிகள்
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையே மொத்தம் 23 டி20 சர்வதேச போட்டிகள் நடந்துள்ளன. 23 போட்டிகளில் பாகிஸ்தான் 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், இலங்கை அணி 10 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணி இலங்கையை விட முன்னிலை வகிக்கிறது, ஆனால் இலங்கையின் தற்போதைய அணியானது இந்த போட்டியில் வெற்றி பெற வலுவான போட்டியாளர்களை கொண்டுள்ளது.
இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஐந்து போட்டிகளைப் பற்றிப் பேசினால், இரண்டு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் வென்றுள்ளன. அதே நேரத்தில் இரண்டு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளன.
அணிகள்
இதன்படி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம், துடுப்பாட்டத்திற்கு உகந்த ஆடுகளமாகக் கருதப்படுகிறது. இந்த ஆடுகளத்தில் வீரர்கள் அதிக ஓட்டங்களை பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
Super Fours | Match 3 ⚔️
— AsianCricketCouncil (@ACCMedia1) September 23, 2025
Pakistan take on Sri Lanka in match that could potentially decide their fate in the tournament.
With both sides having dropped thier first Super Fours clash, who will make amends?#PAKvSL #DPWorldAsiaCup2025 #ACC pic.twitter.com/jXEZacTZ0Q
இலங்கை - பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், கமில் மிஷார, குசல் பெரேரா, சரித் அசலங்க, தசுன் ஷானக, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, துஷ்மந்த சமீர, நுவன் துஷாரா, நுவனிது பெர்னாண்டோ, பினுரயனி மத்னக பெர்னாண்டோ, சாமி கர்னான்டோ, பத்திரன, மகேஷ் தீக்ஷனா
பாகிஸ்தான் - சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான், சல்மான் அகா, ஹுசைன் தலாத், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது, ஹசன் அலி, முகமது வாசிம் ஜூனியர், சுஃபியான் முக்ஸா, சல்மான் முக்ஸா நவாஸ்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
