சிறிலங்கா நாடாளுமன்ற வாக்கெடுப்பின் பின்னணியில் இந்தியாவா - உண்மையை வெளிப்படுத்திய உயர்ஸ்தானிகராலயம்!
சிறிலங்காவின் புதிய அதிபதைத் தெரிவு செய்ய இன்று நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு இந்தியா, சிறிலங்கா அரசியல் தலைவர்களுக்கு அழுத்தங்களை கொடுத்ததாக சமுக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான நிலையில், வெளியாகியுள்ள ஊடக செய்திகளை முற்றாக நிராகரிப்பதாக சிறிலங்காவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் அந்த ஊடக செய்தி அடிப்படையற்றதும் ஆதரமற்றதுமான பொய்யான செய்தி எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புக்கு உட்பட ஜனநாயக முறை, அதன் பெறுமதி மட்டுமின்றி அரசியலமைப்புச் சட்ட ஏற்பாடுகளுக்கு உட்பட்டு இலங்கையர்கள் தமது அபிலாஷையை அடைவதற்கு இந்தியா அனைத்து சந்தர்ப்பங்களில் ஒத்துழைப்புகளை வழங்கும்.
இந்தியா மற்றுமொரு நாட்டின் உள்விவகாரங்களிலோ அல்லது ஜனநாயக செயற்பாடுகளிலோ எந்த சந்தர்ப்பத்திலும் தலையிடாது எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 22 மணி நேரம் முன்