பிரதமரை நோக்கி கேள்விக் கணைகள்- மீண்டும் இன்று முதல்
mahinda
parliament
sri Lanka
dinesh gunawardane
By Kalaimathy
சிறிலங்கா நாடாளுமன்றில் பிரதமரை நோக்கி கேள்விக்கணைகளைத் தொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஆளும் கட்சி மாத்திரமன்றி, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம்(Mahinda Rajabaksha) இரண்டு கேள்விகள் விகிதம் கேட்டு, அவரிடமிருந்து பதிலை பெற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் இன்று முதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படாததை அடுத்தே, பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போயிருந்தது.
இந்த நிலையிலேயே இந்த சந்தர்ப்பத்தினை இன்று முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardane) தெரிவித்துள்ளார்.