ஒத்தி வைக்கப்படவுள்ள நாடாளுமன்றம்: ரணில் எடுத்த தீர்மானம்
சிறிலங்கா நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஒத்தி வைப்பதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப் எனப்படும் நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான நிலையியற் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை பதவி நீக்குவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தை 2 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகாரம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கலைக்கப்படவுள்ள நாடாளுமன்றம்
அத்துடன், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பான திகதியும் சிறிலங்கா அதிபரால் அறிவிக்கப்பட வேண்டும்.
இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதற்கு முன் இருந்த கோப் எனப்படும் நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான நிலையியற் குழு மற்றும் கோபா எனப்படும் அரச பொது கணக்குகள் தெரிவு குழுவின் செயற்பாடுகள், நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படதுடன் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த வட்டாரங்கள்
இந்த நிலையில், தற்போதைய கோப் எனப்படும் நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான நிலையியற் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை பதவி நீக்குவது தொடர்பான திட்டங்கள் நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கும் நடவடிக்கைக்கு பின்னால் இருக்க கூடுமென தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, அண்மை நாட்களில் ரஞ்சித் பண்டார மீது பல குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! |