சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மரக் கன்றுகள் நடுகை
srilanka
people
By Vasanth
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மரக் கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என தேசிய பாதுகாப்பு, உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி பொது இடங்கள், அரச திணைக்கள வளாகங்கள் மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய நலன் கருதி மரக்கன்றுகளை நடுகை செய்வது குறித்து பரிசீலிக்க அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தேசியக் கொடியை ஏற்றுமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்