நாடாளுமன்ற அமர்வின் போது நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய அலி சப்ரி!
sri lanka
economic
parliament
peoples
ali sabry
By Kalaimathy
நாட்டு மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள இன்னல்களுக்கு தனிப்பட்டமுறையில் தான் மன்னிப்பு கோருவதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையை தாம் புரிந்துகொண்டுள்ளதாகவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களின் ஏமாற்றம் நியாயமானது என்பதையும் புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி சிறந்த முறையில் நாட்டை மீட்டெடுப்பது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்