காவல்துறையினரின் மோசமான செயல் - ஆதாரங்களை போட்டுடைத்த சிறுமியால் பெரும் பரபரப்பு (காணொளி)
மருதங்கேணி காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் சில காலமாக போதைப்பொருள் கடத்தல்காரரால் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பல்வேறு போதைபொருட்களை கடத்தி விற்பனை செய்து வரும் நபர் ஒருவரால் கிராம மக்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவல் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்தும் குறித்த நபரை இதுவரையில் கைது செய்யவில்லை என அக்கிராமவாசி ஒருவர் கூறுகிறார்.
இதேவேளை, நேற்றுமுன்தினம் குறித்த நபரிடம் வேறு முறைப்பாடு தொடர்பாக விசாரணைக்காக வந்த மருதங்கேணி காவல்துறையினர் இருவர் லஞ்சமாக பணம் வாங்குவதை சிறுமி ஒருவர் அவதானித்துள்ளார். இதனால் பெரும் சலசப்பும் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வெளிவரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் கூறும் விடயங்களை காணொளியில் காண்க,
