இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறிய காவல்துறை அதிகாரி!
குற்றவியல் புலனாய்வு தகவல் மீளாய்வு அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ஒருவர் எந்தவிதமான அறிவிப்புமின்றி இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரி விடுமுறை அனுமதியை பெறாமல், தான் சுகவீனமாக இருப்பதாக உயர் அதிகாரிக்கு அறிவித்து விட்டு வெளிநாடு சென்றுள்ளார்.
இதன் காரணமாக அவர் சேவையை கைவிட்டு சென்றுள்ளதாக கருதி காவல்துறை தலைமையகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காவல்துறை குற்றவியல் அறிக்கை பிரிவின் குற்றவியல் புலனாய்வு தகவல் மீளாய்வு அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய காவல்துறை பரிசோதகர் ஒருவரே இவ்வாறு எவ்வித அனுமதியும் பெறாமல் ரகசியமாக வெளிநாடு சென்றுள்ளார்.
இதன் காரணமாக முன்னறிவிப்பு எதனையும் செய்யாது கடமைக்கு திரும்பவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் சேவையில் இருந்து விலகி சென்று விட்டதாக கருதி காவல்துறை தலைமையகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
