கைமாறும் சவேந்திர சில்வாவின் இராணுவ தளபதி பதவி! புதிய இராணுவ தளபதியின் பெயர் வெளியானது

Shavendra Silva Sri Lanka Army Sri Lanka SL Protest
By Kalaimathy May 26, 2022 10:01 AM GMT
Report

பதவி விலகல்

சிறிலங்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வா பதவி விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மே 31 அன்று இராணுவத் தளபதி பதவியை சவேந்திர சில்வா இராஜினாமா செய்யவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி இராணுவ கட்டமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

இந்நிலையிலேயே இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது தம்மை பாதுக்காக இராணுவத்தினர் தவறியுள்ளதாக அரசியல்வாதிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

கைமாறும் சவேந்திர சில்வாவின் இராணுவ தளபதி பதவி! புதிய இராணுவ தளபதியின் பெயர் வெளியானது | Sri Lanka Politics Army Shavendra Silva

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் நெருக்கமாக செயற்பட்ட முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்து அழிக்கப்பட்டன.

இவ்வாறான வன்முறையின் போது அரசியல்வாதிகளான தமக்கு பாதுகாப்பு வழங்காமல், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சார்பாக இராணுவம் செயற்பட்டதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இராணுவ தளபதிக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வரும், நிலையில் அவர் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய நியமனம்

கைமாறும் சவேந்திர சில்வாவின் இராணுவ தளபதி பதவி! புதிய இராணுவ தளபதியின் பெயர் வெளியானது | Sri Lanka Politics Army Shavendra Silva

அதேவேளை 2022 ஜூன் 1 ஆம் திகதி புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, தற்போது பதவி வகித்து வரும் இராணுவப் பிரதானி பதவியில் இருந்து விலகியதன் பின்னர் ஜூன் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026