சிறிலங்காவின் அதிபரானார் ரணில்..! வெளியான அதிவிசேட வர்த்தமானி
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Kanna
அதிபர் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின்படி, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 2022 ஜூலை 20ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அதிபர் தெரிவின் போது, ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளை பெற்று அதிபராக தெரிவானார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி