ஆரம்பமானது ரணிலின் சாணக்கிய நகர்வு- வசப்படுத்திக்கொண்ட முக்கிய அமைச்சு!

Ranil Wickremesinghe Prime minister Sri Lanka Sri Lanka Cabinet Ministry of Finance Sri Lanka
By Kalaimathy May 16, 2022 08:16 AM GMT
Report

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில், முக்கிய அமைச்சை, பிரதமர் ரணில் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் நிதி அமைச்சை பிரதமர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் புதிய அமைச்சரவை 18 அமைச்சர்களைக் கொண்டிருக்கும் எனவும் பொதுஜன பெரமுனவுக்கு எட்டு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களுக்கு ஐந்து அமைச்சுப் பதவிகள் ஒதுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மீதமாகவுள்ள அமைச்சுப் பதவிகள் அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் அலுவலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இன்று காலை 9.00 மணிக்கு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அதன் பின்னர் விமல் வீரவன்ச மற்றும் அரசாங்கத்தின் ஏனைய பத்து சுயாதீன உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளளது.

நேற்று விமல் மற்றும் அவரது தரப்பினருக்கு கலந்துரையாடலுக்கான நேரம் வழங்கப்பட்டது. எனினும் வேறு திகதியை வழங்குமாறு பிரதமர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நான்கு அமைச்சர்களுக்கு மேலதிகமாக ஏனைய அமைச்சர்கள் இன்னும் ஓரிரு தினத்திற்கு பின்னர் நியமிக்கப்படுவார்கள் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் போது நிதியமைச்சராக ரணில் பதவியேற்கவுள்ளதோடு, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்தவின் பெயர் கல்வி அமைச்சர் பதவிக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026