விடுதலைப் புலிகளின் தலைவர் கூறிய தீர்க்கதரிசனம் - இலங்கையில் இன்று நடைமுறையில்...
“ நான் சிங்கள மக்களுக்கு எதிரானவனும் அல்ல. அவர்களை எதிரியாக பார்ப்பவனும் அல்ல” என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் பல இடங்களில் கூறியிருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தை குறிப்பிட்ட அவர், தலைவரின் தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இன்று, இலங்கையில் தெளிவாக நடைமுறையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நான் அவர்களின் வரலாறு, பண்பாடு, கலாசாரத்தை மதிக்கின்றவன். ஆனால் எங்கள் மீது நீட்டப்படும் துப்பாக்கிகள், செய்யும் கொலைகள் என்றோ ஒருநாள் சிங்கள மக்கள் மீது திரும்பும். அப்போது சிங்கள மக்கள் புரிந்துகொள்வார்கள் எனக் கூறியிருந்தார்.
அன்றைய தலைவரின் தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இன்று இலங்கையில் நிதர்சனமாகி இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
