உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன்! அமெரிக்க ஜனாதிபதிக்கு அநுர வாழ்த்து
அமெரிக்காவின் (USA) 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு (Donald Trump), ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் ஜனாதிபதி பதிட்டுள்ளார்.
ஜனாதிபதி வாழ்த்து
குறித்த பதிவில், "அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப்க்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
Warm congratulations to President-elect @realDonaldTrump on receiving a strong endorsement as the 47th President of the United States of America. I look forward to engaging with your administration in realizing common objectives of our relations that are beneficial to the people…
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) November 6, 2024
இலங்கை மற்றும் அமெரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும் எமக்கிடையிலான உறவிலுள்ள பொதுவான இலக்குகளை அடைவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று (5) நடைபெற்றது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
நேற்று இலங்கை நேரப்படி மாலை 4.30ற்கு வாக்கு பதிவுகள் இடம்பெற்று இன்று காலை 5.30 மணியளவில் முடிவுற்றது.
தேர்தலில் ஆளுங் கட்சியை சேர்ந்த சேர்ந்த கமலா ஹாரிசும் குடியரசுக்கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் களமிறங்கினர்.
இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவிய நிலையில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் வெற்றிப்பெற்று ஜனாதிபதியாகியுள்ளார்.
இவருக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |