யாழ்ப்பாணத்தில் தமிழ் காவல்துறையினருக்கு தட்டுப்பாடு!
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரத்தை கையாளும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவது தொடர்பாக ஆராயப்பட்டது.
குறிப்பாக தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் கொடிகாமம், சாவகச்சேரி காவல் நிலையத்தில் இல்லாமை சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (08) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.
தமிழ் காவல்துறையினர் விபரம்

இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் தமிழ் காவல்துறையினர் தொடர்பில் ஆராயப்பட்டது.
அதன்படி, யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் பிராந்தியம் காங்கேசன்துறை பிராந்தியம் என 17 காவல் நிலையத்தில் 17 ஆண் காவல்துறையினரும் 14 பெண் காவல்துறையினருமாக மொத்தமாக 31 காவல்துறை உத்தியோகத்தர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.