வானிலையில் மாற்றம்...! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
நாட்டில் நாளை (23) முதல் தற்போது நிலவும் வறண்ட வானிலை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தீவின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும்.
எச்சரிக்கை
அதிகாலையில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் தரை உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
அத்தோடு மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் அதிகாலையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |