செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி!
2026 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதத்தில் 158,971 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்திருந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 158,557 பேர் வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் செப்டெம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து 51,931 சுற்றுலாப் பயணிகளும், சீனாவில் இருந்து 11,722 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவில் இருந்து 10,951 சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 10,738 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வந்துள்ளனர்.
1,693,679 சுற்றுலாப் பயணிகள்
அந்தவகையில் இந்தியா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும், அவுஸ்திரேலியா மூன்றாம் இடத்திலும், பிரித்தானியா நான்காம் இடத்திலும் உள்ளன.

இதேவேளை இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1,693,679 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய இந்தியா, பிரித்தானியா, சீனா, ஜேர்மனி ஆகிய நாடுகள் முறையே முதல் நான்கு இடங்களையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |