எரிபொருள் நிலையத்தில் காவல்துறையினரின் அத்துமீறிய செயற்பாடு - இருவர் கைது!

Sri Lanka Police Vavuniya Sri Lanka Government Of Sri Lanka
By Kalaimathy Jul 18, 2022 08:12 AM GMT
Report

வவுனியாவில் அரச ஊழியர்களிற்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து நகரசபை உறுப்பினர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச ஊழியர்களிற்கும் காவல்துறைியனருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக நகரசபை உறுப்பினர் உட்பட மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வவுனியாவில் இருவர் கைது

எரிபொருள் நிலையத்தில் காவல்துறையினரின் அத்துமீறிய செயற்பாடு - இருவர் கைது! | Sri Lanka Vavuniya Police Peoples Protest Fuel

வவுனியா மன்னார் வீதி நெளுக்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக இரவு பகல் பாராது அரச உத்தியோகத்தர்கள் ஒரு வரிசையிலும், பொதுமக்கள் ஒரு வரிசையிலும் காத்திருந்தனர்.

இந்நிலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தமக்கான புதிய வரிசையினை உருவாக்கி எரிபொருளினை பெறும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

மேலும் காவல்துறையினர் தங்களிற்கான எரிபொருளினை பெற்ற பின்னரே அரச ஊழியர்கள் பெற முடியும் என தெரிவித்தமையால் அரச ஊழியர்களுக்கும் காவல்துறையினருக்கும்  இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினரிடம் கேள்வி கேட்ட நகரபை உறுப்பினர் பாரி, மற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

எரிபொருள் வரிசையை குழப்பிய காவல்துறை

எரிபொருள் நிலையத்தில் காவல்துறையினரின் அத்துமீறிய செயற்பாடு - இருவர் கைது! | Sri Lanka Vavuniya Police Peoples Protest Fuel

இதனால் அப்பகுதியில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டதுடன் இரு காவல்துறையினருக்கு இரு அரச ஊழியர்கள் என்ற ரீதியில் எரிபொருளினை வழங்க காவல்துறையினர் உடன்பட்டதன் பின்னரே குறித்த குழப்ப நிலை முடிவுக்கு வந்திருந்தது.

இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வநியோகிக்கும் போது காவல்துறைியனர் அதிகளவில் விசேட முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளினை பெற்றுச்செல்வதனால் தங்களிற்கான எரிபொருளினை பெறுவதற்கு பல நாட்களிற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி