வாகன இறக்குமதியில் வீழ்ச்சி! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
வாகன இறக்குமதி மீது 50 வீத கூடுதல் வரி விதிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் வாகன இறக்குமதி குறைந்துள்ளதாக நிதித்துறை பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்ட இறுதி நாளான மே 15 அன்று, 23.71 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் கடிதங்கள் (LCs) திறக்கப்பட்டதாக அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மே 18 அன்று 17.9 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலும், மே 19 அன்று அது மேலும் குறைந்து 14.98 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலும் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி குறைப்பு
பொதுவாக இறக்குமதி குறைப்பு என்பது படிப்படியாகவே நிகழும் என்பதால், இது முழுமையாகக் குறைவதற்குக் கூடுதல் காலம் எடுக்கும் என்றும் அமைச்சர் விளக்கியுள்ளார்.

இதேவேளை, கூடுதல் வரி விதிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மே 15 அன்று சில நிறுவனங்கள் 4,000 வாகனங்களுக்காகக் கடன் கடிதங்களைத் திறந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் மறுத்துள்ளார்.
உண்மை நிலவரப்படி, மே 15 அன்று 23.71 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள 1,782 வாகனங்களுக்காக மட்டுமே கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |