ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்கு இலங்கை இன்று பதில் வழங்கும்
Sri Lanka
Dinesh Gunawardena
By Vasanth
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் இன்று பதில் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான ஆவணம் இன்றைய தினம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதை குறிப்பிட்டார். மேலும் இந்த விடயம் தொடர்பில் முழுமையாக கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள அறிக்கையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவை அனைத்துக்கும் இன்று பதிலளிக்கப்படுவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி